Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Thursday 14 December 2023

பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும்,

 பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன்  வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும்  அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது  திரை உலகத்தினுடைய  நம்பிக்கை.  இதன் சான்றாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.














மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடுக்ஷன்ஸ்

K.கந்தசாமி மற்றும்

K. கணேசன் வழங்கும் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் (To - Let திரைப்படத்தின் புகழ் சந்தோஷ்  நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்து   வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள 'வட்டார வழக்கு' திரைப்படம் இத்தகைய கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படம் ஆகும்.


 1962  லிருந்து இன்னும் வளராம இருக்கும் கிராமமா?


 "வட்டார வழக்கு என்ற திரைப்படம் வெளிவந்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்துக்கொண்டிருக்கிறது. மதுரை மேற்கில் நடந்த ஒரு உண்மை சம்பவம் மேற்கொண்ட இத்திரைப்படம் பகை, காதல், கோபம், வெறுப்பு, கொலை, வழக்கு என்ற பல பரிமாணங்கள் அடங்கிய இத்திரைப்படத்தில், 2017 - இல்  தேசிய விருது வென்ற To - Let  திரைப்படத்தில் நடித்த சந்தோஷ் நம்பிராஜன் நடித்திருக்கிறார்  மேலும்  லவ் டுடே, மாமன்னன்  போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்த ரவீனா ரவி இத்திரைப்படத்தின் கதாநாயகி ஆவார்.  இப்படத்தில்  இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது இத்திரைப்படத்தின் இசை அம்சமாக பலம் சேர்க்கிறது. இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமா காணாத காதல்  காட்சிகள் போல் இல்லாமல்,  காதல் வசனங்கள் இல்லாமல் இவ்வளவு ஏன் காதலர்கள் நேரிலும் சந்திக்காமல்  மலர்ந்த  ஒரு புதுவிதமான காதல் உணர்வை காட்டுகிறார் இயக்குனர்  கண்ணுச்சாமி ராமச்சந்திரன். படத்தில் ஒரு கால் மணி நேர பகுதி படத்தின் விறுவிறுப்பான  காட்சிகள் அடங்கி பல திருப்புமுனைகளை இத்திரைகதையில் நிகழ்த்தியுள்ளது.

 

1985 ஆம் ஆண்டில்  நடக்கின்ற இத்திரைகதையில், 1962  ஆம் வருடத்தில்  நடப்பது போல் ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் எடுக்க ஒரு இடம் தேவைப்பட்டது. அப்போது  ஒரு மேற்கு மதுரையில் உள்ள  கல்லுப்பட்டி  என்ற கிராமம் எத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் அதே பழமையுடன் இருப்பது தெரியவந்தது.   அக்கிராமத்தில் தான் இத்திரைப்படம்   எடுக்கப்பட்டது"

இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இம்மாதம் வரும் டிசம்பர் 29 - ஆம் தேதி இத்திரைப்படம்  சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் நிறுவனத்தால் பெருமையுடன் வெளியிடப்படுகிறது.


 நடிகர்கள் மற்றும் குழுவினர்கள்:


நடிகர்கள்:  சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திர

திரைக்கதை மற்றும் இயக்கம்:   கண்ணுச்சாமி  ராமச்சந்திரன்

 ஒளிப்பதிவு:  மூடர் கூடம் டோனி ஷார்ட்,  சுரேஷ்  மண்ணியன்

படத்தொகுப்பு: வெங்கட்ராஜன்

No comments:

Post a Comment