Featured post

From the Jungle to the Badlands: The Predator’s Evolution Reaches Its Deadliest Hunt Yet

 *From the Jungle to the Badlands: The Predator’s Evolution Reaches Its Deadliest Hunt Yet* For nearly four decades, the Predator has remain...

Thursday, 26 January 2023

ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின்

 *ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின் சுதந்திரம் குறித்து பரபரப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கக்கூடிய 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிடுவதில் படக்குழு பெருமிதம் கொள்கிறது*


'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டீசர் ஆன்லைனில் வெளியானதில் இருந்து, இந்த எபிக் பீரியட் ட்ராமா குறித்து மேலும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு குடியரசு தினத்தன்று வெளியிட்டுள்ளது. 


அற்புதமான கதை சொல்லியான ஏ.ஆர். முருகதாஸ் இந்த முறை தயாரிப்பாளராக மீண்டும் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தில் களம் இறங்கி இருக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக  வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி இந்தக் கதை கூற இருக்கிறது. 


கண்ணைக் கவரும்படி அமைந்துள்ள இந்த போஸ்டர் தேசபக்தி மற்றும் படத்துடைய ஆன்மாவை தாங்கி நிற்கிறது. படத்தின் முன்னணி கதாநாயகன் கையில் டார்ச்சுடனும் கண்ணில் எரியும் தாய்நாட்டு தேசபக்தியுடனும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நெருப்பு ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டதா அல்லது இந்த நாயகர்களுக்கு சோகமான முடிவை கொடுத்ததா? இந்த கேள்விகளுக்கான விடையை படம்தான் கொடுக்கும். 


ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரியுடன் இணைந்து இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார். ஒரு சுதந்திர சகாப்தத்தைப் பற்றிய கதையான 'ஆகஸ்ட் 16, 1947’ படத்தில் ஒரு சிறிய கிராமம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வாழ்வையே அசைத்துப் பார்த்தது.


அப்படியான இந்தக் கதையின் போஸ்டர், குடியரசு தினத்தன்று வெளியாகி இந்நாளை மேலும் சிறப்பாக்கியுள்ளது.


பர்பிள் புல் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் சார்பில் ஏ.ஆர். முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஆதித்ய ஜோஷி ஆவார். கெளதம் கார்த்திக், புகழ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தக் கதையை NS பொன்குமார் இயக்கி இருக்கிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment