Featured post

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal*

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal* Yash Is Raya. Period. ‘Daddy’s Home’ Echoes Through a Savage Tox...

Saturday, 28 January 2023

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும்,

 HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios  உடன் இணைந்து வழங்கும்,  

 

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், 


'தக்ஸ்' திரைப்பட டிரெய்லரை பிரபலங்கள் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்!!! 


இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவரது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக தக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான HR Pictures சார்பில் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வழங்குகிறார். ரியா ஷிபு இப்படத்தை தயாரிக்கிறார். 



இப்படத்தின் டிரெய்லரை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  வெளியிட்டனர். 


2 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக்கூடிய டிரெய்லர் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக அமைந்துள்ளது. படத்தின் முன்னணி நடிகர்களான ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ் காந்த் ஆகியோரின் நடிப்பும் கதாப்பாத்திர அமைப்பும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.  சாம் CS-ன் அற்புதமான பிஜிஎம், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் அட்டகாசமான காட்சிகள் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் நேர்த்தியான எடிட்டிங் அனைத்தும் இணைந்து,  பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எல்லாவற்றையும் விட இயக்குனர் பிருந்தாவின் மேக்கிங் ஸ்டைல் ஒரு  கைதேர்ந்த இயக்குனரின் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.


தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 


நடிகர்கள்:

ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர்


தொழில் நுட்பக் குழுவினர்:

இயக்கம் : பிருந்தா 

தயாரிப்பு : HR  பிக்சர்ஸ் - ரியா ஷிபு

இசை : சாம் CS

ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி

புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்

எடிட்டர்: பிரவீன் ஆண்டனி

ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : பரமேஷ்வர் சுபாஷ்

ஆடை: மாலினி கார்த்திகேயன்

நிர்வாக தயாரிப்பாளர் - யுவராஜ்

இணை இயக்குனர்: ஹரிஹரகிருஷ்ணன் ராமலிங்கம்

டிசைனர்: கபிலன்

மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் - சிவா (AIM)

No comments:

Post a Comment