Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Thursday 26 January 2023

பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் 'சைந்தவ்

 *பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் 'சைந்தவ்'*


தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது படமான 'சைந்தவ்' திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.








இந்தப் படத்தின் டைட்டில் லுக் மற்றும் காட்சி துணுக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் பட குழுவினருடன் நடிகர்கள் நானி, ராணா டகுபதி, நாக சைதன்யா, தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சுரேஷ் பாபு, ராகவேந்திர ராவ், மைத்ரி நவீன், சிரிஷ், வைரமோகன் செருகுரி, டாக்டர் விஜேந்தர் ரெட்டி, ஏகே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் அனில் சுங்கரா, பீப்பிள்ஸ் மீடியா விஷ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா, 14 ரீல்ஸ் பிளஸ் கோபி அச்சந்தா, ஷைன் ஸ்கிரீன்ஸ் சாஹு கரபதி, எஸ் எல் வி சினிமாஸ் சுதாகர் செருகுரி, இயக்குநர் விமல் கிருஷ்ணா, பண்ட்லா கணேஷ், சித்தாரா நாகவம்சி, இயக்குநர் பி. கோபால், எம். எஸ். ராஜு, தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், கிளாசிக் சுதீர், நிஜாம் சஷி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். 


நடிகர்கள் ராணா ரகுபதி, நாக சைதன்யா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு ஆகியோர் 'சைந்தவ்' படத்தின் திரைக்கதையை படமாக தொடங்குவதற்காக தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் கிளாப் அடிக்க, தில் ராஜு கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, முதல் காட்சியை அனில் ரவிபுடி இயக்கினார்.


'சைந்தவ்' படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் 'சைந்தவ்' அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும் என்றும், இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில், வெங்கட் போயனப்பள்ளி தயாரிப்பில், விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

No comments:

Post a Comment