Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Saturday, 21 January 2023

ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்காதிரி இசையமைத்து பாடிய மகாகவி

 ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்காதிரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியாரின் எந்தையும் தாயும் பாடல் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது.


 *எந்தையும் தாயும்_வந்தேமாதரம்* எனும் தலைப்பில் ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்காதிரி இசையமைத்து  வெளியிடப்படவுள்ள இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் இயக்கியுள்ளார். 




திரைப்படங்களில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பாடியிருந்தாலும், தான் தயாரித்து இசையமைத்துப்பாடிய இந்த பாடலை தேசத்திற்கான நன்றிக்கடனாக  கருதுவதாக ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்காதிரி  தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து இசையமைப்பில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


சக்ஸஸ் 11 நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடலை குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். மேலும் பல்வேறு சிறந்த கலைஞர்களின் பங்களிப்போடு இந்த பாடல் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment