*தன்னுடைய ரசிகர் மன்ற பொருளாளர் கே.வினோத்தின் மறைவிற்க்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்*
வினோத் வயது 29. அப்பா பெயர் குமார், அம்மா பெயர் சாந்தி. சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவர் ஓட்டுனராக பணிபுரிகிறார். தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக உள்ளார். வினோத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி
திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment