Featured post

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம்

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம்  ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் ! மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மால...

Thursday 26 January 2023

*விவசாய வாழ்க்கை இழந்து விட்டேன் என்று பின்னர் யோசிக்கும் போது தான்

 *விவசாய வாழ்க்கை இழந்து விட்டேன் என்று பின்னர் யோசிக்கும் போது தான் வருத்தமாக இருந்தது - இயக்குநர் பொன்வண்ணன்*


பொன்வண்ணன் கூறியதாவது,


நான் வாழ்ந்தது ஒரு கிராமத்து வாழ்க்கை தான். என் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி. படிப்பதோடு, புத்தகம் வாசிப்பது என வாழ்க்கை பயணித்தது. எனது குடும்பம் கிராமத்தின் ஆழமான வாழ்க்கையை பல ஆண்டுகளாக வாழ்ந்தார்கள். எனது குடும்பம் விவசாய வாழ்க்கையை தான் முழுவதுமாக வாழ்ந்தது. காலம் மாற மாற, நான் சமூகப்பாதையில் சென்ற பின், நான் விவசாயத்தில் இருந்து நகர ஆரம்பித்தேன். நான் சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஆனால், எனது பெற்றோர் விவசாயத்தில் தான் கடைசி காலம் வரை இருந்தார்கள். ஒரு விவசாய வாழ்கையை இழந்துவிட்டு தான் நான் என் பாதையை மாற்றி இருக்கிறேன் என்று பின்னர் யோசிக்கும் போது தான் தெரிந்தது. அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது. விவசாயம் என்பது மிகவும் ஆபத்தான, வலிகளை தரக்கூடிய ஒரு பாதை என்று ஆய்வுகள் கூறுகிறது. ஏனென்றால், விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது மண்ணோடு போராட வேண்டி இருக்கிறது, இயற்கையோடு போராட வேண்டி இருக்கிறது, பின்னர் சந்தைப்படுத்துதலோடும் போராட வேண்டி இருக்கிறது. விவசாயிகள் பல இழப்புகளை சந்திக்கிறார்கள். ஆனால், இழப்புகளை தாண்டி அவர்கள் பயணிக்கிறார்கள். முதலில் நிலங்களை மண் அமைப்புகளை வைத்து வகைப்படுத்துவார்கள். ஆனால், இப்போது அங்கு அருகே வரப்போகும் கட்டிடங்களையும், இடங்களையும் வைத்து வகைப்படுத்துகிறார்கள். அது எனக்கு வருத்தமளிக்கிறது. சமூக வலைதளத்தில் இளைஞர்கள் விவசாயம் பற்றி பேசுகிறார்கள். ஆனால், விவசாயம் செய்ய மிகப்பெரிய தியாகமும், உழைப்பும் தேவைப்படுகிறது. அதை செய்யும் இந்த இளைஞர்களை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கார்த்தி, சினிமாத் துறையை தாண்டி இந்த முன்னெடுப்பை செய்வதில் மகிழ்ச்சி. அவர் இதற்காக நுணுக்கமாக யோசித்து வேலைபார்க்கிறார். அதற்கு எனது பாராட்டுகள். காவிரி நதி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல பகுதிகளை சென்றடையாமல் வீணாய் போய் கொண்டு இருந்தது. அப்போது அதை களைய வேண்டும் என்ற முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டது தான் காளிங்கராயன் வாய்க்கால். அதன் அமைப்பு பல பகுதிகளை செழிக்க வைத்தது. எதிர்காலத்தை யோசித்து அதை அமைத்த காளிங்கராயன் அவர்களுக்கு இந்த இடத்தில் நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.,

No comments:

Post a Comment