Featured post

தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய்

 *தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் !!* *சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீட...

Friday 6 January 2023

பாணி பாராட்டத்தக்கது. " எனக் குறிப்பிடுகிறார்கள்.

 பாணி பாராட்டத்தக்கது. " எனக் குறிப்பிடுகிறார்கள்.


இதனிடையே ஷியாமளாங்கன், பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தில் இடம்பெறும் விசில் ஒலியை, சங்கீதமாக எழுப்பி படத்தின் வெற்றிக்கு தன் பங்களிப்பை அளித்தவர் என்பதும், அதற்கான ஒலிப்பதிவு ஆஸ்திரேலியாவில் இவரது இல்லத்தில் இசை அமைப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’, மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ ஆகிய படங்களிலும் பாடல்கள் பாடி தன் பங்களிப்பை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





இசைக் கலைஞர் ஷியாமளாங்கன் இதுவரை தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழிகளிலும் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார்.


'இசை என்பது எம்முள் இணையாகப் பயணிக்கும் தவிர்க்க முடியாத இணை சக்தி' எனும் கொள்கையை உறுதியாக பின்பற்றும் ஷியாமளாங்கன் சுயாதீன பாடல்களை இசையமைத்து வெளியிடுவதில் தொடர்ந்து தனித்துவத்தை பின்பற்றி வருபவர்.


இந்த சுயாதீன பாடல் முயற்சி திரைப்பட நுழைவுக்கான ஒரு படிக்கட்டா என்று கேட்டால்?


"இன்று திரைப்படம் எனது பயணத்தில் ஒன்றாக இருக்குமே தவிர அதுவே முழுமையான இலக்கு என்று கூற முடியாது. ஏனென்றால் இசைப் பயணத்தில் ஏராளமான பாதைகள் பயணங்கள் என் முன் தெரிகின்றன.

முன்பு போல் இப்போதில்லை. காலம் மாறி உள்ளது. இப்போது இது மாதிரி சுயாதீனப் பாடல்களுக்கு தனியே வரவேற்பும் அதற்கான வியாபார வாய்ப்புகளும் ஏராளம் உள்ளன. பாடலைப் பாடி, இசையமைத்துக் கொண்டே இருக்கலாம். அதற்கு ஏராளமான வாய்ப்புகள் திறந்து உள்ளன. உலக இசைக்கலைஞர்களை இணைக்க வேண்டும் என்பதே எனது பெரிய இலக்கு. எனது பாதையில் நான் செல்லும் எனது பயணத்தில் நான் கற்ற இசையை புதிய வடிவமாக கொடுக்க வேண்டும்" என்கிறார் நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment