Featured post

THE CREATOR Movie Review

THE CREATOR Movie Review  Hai, Hello friends, இப்போ நம்ம பாக்க போறது ஒரு பிரம்மிப்பான action thriller movie 'THE CREATOR", ஓட revie...

Thursday, 14 September 2023

ஹைதராபாத்தில் “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு

 *ஹைதராபாத்தில்   “உஸ்தாத் பகத் சிங்”  திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது!!*




பவர் ஸ்டார் பவன் கல்யாண், ஹரிஷ் சங்கர், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து வழங்கும் அதிரடி திரைப்படம்  “உஸ்தாத் பகத் சிங்” படத்தின்  பிரமாண்ட முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது!!  


ரசிகர்களே தயாராகி கொள்ளுங்கள் அதிரடியான திரை விருந்து தயாராகி வருகிறது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கரின் வெற்றிகரமான கூட்டணியில், உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் பரபரப்பாகப் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இடைவெளியில் தயாரிப்பாளர்கள் ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக சில படங்களை பிரத்தியேகமாகப் பகிர்ந்துள்ளனர்



இந்த போஸ்டர்களில் பவன் கல்யாண் அடர்ந்த இருள் பின்னணியில்,  காக்கி உடையில் அசத்தலாகக் காட்சியளிக்கிறார், மேலும்  ஒரு போஸ்டரில் அவர் இயக்குநர் ஹரிஷ் ஷங்கருடன் தீவிரமாக உரையாடுவதைக் காணலாம், மற்றொரு போஸ்டரில் அவர் செட்டில் உலாவுவதைக் காணலாம்.


மைத்ரி மூவி மேக்கர்ஸின் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர்,  உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தைப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள், முன்னணி இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.


இப்படத்திற்கு அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்கிறார், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். எடிட்டிங் சோட்டா K பிரசாத் செய்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் டைரக்டர்களான ராம்-லக்ஷ்மண் மேற்பார்வையிடுகிறார்கள்.


நடிகர்கள்: பவன் கல்யாண், ஸ்ரீலீலா, அசுதோஷ் ராணா, நவாப் ஷா, கேஜிஎஃப் புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா ஸ்ரீனு, நாகா மகேஷ், மற்றும் டெம்பர் வம்சி



தொழில்நுட்பக் குழு: 

எழுத்து இயக்கம் - ஹரிஷ் ஷங்கர் S தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y.ரவி சங்கர் 

பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் 

CEO: செர்ரி 

திரைக்கதை: K தசரத் 

இசை: தேவி ஸ்ரீ பிரசாத் 

ஒளிப்பதிவு : அயனங்கா போஸ் 

எடிட்டர்: சோட்டா K பிரசாத் 

கூடுதல் எழுத்தாளர்: சி.சந்திரமோகன் தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஆனந்த் சாய் சண்டைகள்: ராம் - லக்ஷ்மன் 

நிர்வாக தயாரிப்பாளர்கள்: சந்திர சேகர் ரவிபதி, ஹரிஷ் பாய் 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

No comments:

Post a Comment