Featured post

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRIS...

Tuesday, 12 September 2023

ஷாருக்கானின் 'ஜவான்' பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து வெற்றி நடையுடன் கம்பீரமாக

 *ஷாருக்கானின் 'ஜவான்' பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து வெற்றி நடையுடன் கம்பீரமாக பயணிக்கிறது. உலகம் முழுவதும் 574.89 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஐந்து நாட்களில் 319.08 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.!*



ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு மக்களின் பேராதரவு தொடர்கிறது. முதல் நாளிலேயே தனது பிரம்மாண்டமான வருகையை பதிவு செய்த நிலையில்.. ஒவ்வொரு நாளும் இந்தத் திரைப்படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதிரடி பொழுதுபோக்கு ஆக்சன், நாடகம், அழுத்தமான சென்டிமென்ட்.. என பலவற்றைக் கொண்டிருப்பதால் ஜவான் மக்களின் இதயங்களை ஆள்கிறார்.‌ இந்த திரைப்படம் ஏற்கனவே அதன் வெளியீட்டிற்கு முன்னதான முன்பதிவு மூலம் சாதனை படைத்திருந்தாலும், வெளியீட்டிற்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறது. வெளியான ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் 319.08 கோடி ரூபாயை வசூலித்து சாதனையை படைத்திருக்கிறது. 


திங்கட்கிழமையன்று ஜவான் இந்தியில் மட்டும் 30.50 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் 2.42 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மொத்தம் 32.92 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் திங்கட்கிழமையன்று 25.50 கோடியாக இருந்த பதானின் வசூலை.. ஷாருக் கான் தனது சொந்த படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறார்.


ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வலுவான சாதனையை நிகழ்த்தி வருகிறது. மேலும் வார இறுதிக்குப்  பிறகு அதன் வசூல் அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் நாளொன்றுக்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்து வருகிறது. 


ஜவான் படத்தின் இந்திய அளவிலான வசூலை.. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பார்த்தோமானால், இந்தியில் மட்டும் இந்த திரைப்படம் 282.52 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மற்ற மொழிகளில் 36.50 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஆக இந்தியாவில் மட்டும் ஜவான் திரைப்படம் 319.08 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. 


ஜவான் திரைப்படம் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் ஏழாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment