2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, திரு. எம். சரவணன் அவர்களின் திரு உருவப் படத்தைத் திறந்து வைத்தார்கள். மேலும் திரு. ரஜினிகாந்த், திரு. கமல் ஹாசன், திரு. என். ராம், திரு. நல்லி குப்புசாமி செட்டியார், திரு. வைரமுத்து, திரு. எஸ்பி. முத்துராமன் மற்றும் திரு. வி.சி. குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் மரியாதையை செலுத்தினர்.
பல்வேறு பணிச்சுமையிடையே நேரம் ஒதுக்கி எங்களுடன் கலந்து கொண்டு, திரு உருவப் படத்தைத் திறந்து வைத்து, திரு. எம். சரவணன் உடனான தனக்கிருந்த பல பசுமையான நிகழ்வுகளை பகிர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்களின் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன் அவர்களிடம் கொண்ட அன்பையும், அவரைப் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்த திரு. ரஜினிகாந்த், திரு. கமல் ஹாசன், திரு. என். ராம், திரு. நல்லி குப்புசாமி செட்டியார், திரு. வைரமுத்து, திரு. எஸ்பி. முத்துராமன் மற்றும் திரு. வி.சி. குகநாதன் அவர்களுக்கு எங்களின் இதயப்பூர்வமான நன்றிகள்.
எங்களின் துயர வேளையில் எங்களுடன் இருந்து, அவரின் நினைவுகளை அன்புடன் போற்றிய அனைவருக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment