ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..!
கேரளாவில் நிவாரண பொருட்களை வழங்கிவரும் அபிசரவணன்..!
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..!
ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..!

வெள்ளப்பகுதியில் விறுவிறு நிவாரண பணியில் அபிசரவணன்..!
கேரள எம்.எல்.ஏவுடன் நிவாரண பணிகளுக்காக கைகோர்த்த அபிசரவணன்..!


நிவாரண பணிகளுக்காக கேரளா நோக்கி செல்லும்போதே இங்கிருந்து போகும் வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வாங்கிக்கொண்டே கேரளாவுக்குள் நுழைந்துள்ளார் அபிசிராவணன்..
வயநாடு பகுதி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு, அங்கு கலெக்டர் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சில ந(ண்)பர்கள் சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார் அபிசரவணன். அந்தவகையில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர் அபிசரவணன் மற்றும் அவரது குழுவினர்,
இதன்மூலம் ஏழு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 2000 பேர்களுக்கு இவர்களது உதவி சென்று சேர்ந்துள்ளது. உள் கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் சிறிய படகுகளின் மூலம் தங்களது நிவாரண உதவியை இவர்கள் தொடர்ந்துள்ளனர் .
இந்த முயற்சியில் அபிசரவணனுக்கு உதவியாக அகில இந்திய கிக் பாக்சிங் பிரசிடென்ட் கேசவ், திருமதி. சரண்யா மதன், ஆனந்த் மற்றும் ரகு ஆகியோர் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
No comments:
Post a Comment