Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Wednesday 1 January 2020

சிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு

சிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு
பதிலாக நட்டி ! 

இந்திய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களாக கொண்டாடப்படுபவர்களில் ஒருவராக இருக்கும் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழை குவித்து வருகிறார். “சதுரங்க வேட்டை” தொடங்கி வித்தியாசமான வேடங்களில் தனது சிறந்த நடிப்பை தந்து வரும் அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் பெரிதும் ஈர்க்கும் நடிப்பை வழங்கியிருந்தார். தற்போது சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “வால்டர்” படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இது குறித்து அறிமுக இயக்குநர்
U.அன்பு கூறியதாவது...

“வால்டர்” படத்தின் வெகு முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குநர் கௌதம் மேனனை அணுகியது அனைவரும் அறிந்ததே. அவரும் இந்த கதாப்பாத்திரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு,  நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. அதன் பிறகு பல நடிகர்களை இக்கதாப்பாதிரத்திற்கு பரிசீலித்தோம். இறுதியாக “நம்ம வீட்டு பிள்ளை” படத்திற்கு பிறகு நடிகர் நட்டி அவர்களை இக்கதாப்பாத்திரத்திற்கு அணுகினோம். குவியும் வாய்ப்புகளில் நல்லதை மட்டுமே செய்வேன் எனும் கொள்கையில் அவர் இருந்தார். கதையை முழுதாக கேட்ட பின்பே இப்படத்தில் நடிப்பதை பற்றி பேச முடியும் என்றார். கதை கேட்டதன்  முடிவில் படத்தின் மீதும் அவரது பாத்திரம் மீதும் அவருக்கு பெரும் நம்பிக்கை வந்து உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டார். அவரது பாத்திரம் சம்பந்தமான காட்சிகளை 15 நாட்கள் முன்னதாக தொடங்கி கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளோம்.

நட்டி வில்லன் பாத்திரத்தில் நடிப்பதாக பரவிய செய்திகள் குறித்து கூறிய இயக்குநர்...

அவரது பாத்திரம் முழுக்க வில்லன் என சொல்லமுடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மறையானவரா அல்லது எதிரமறையானவரா என இறுதி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாப்பாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும் என்றார்.

சிபிராஜ் குறித்து கூறும்போது ...
அவரது திறமை குறித்து புதுமுகமான நான் கூறி தெரியவேண்டியதில்லை. மொத்த சினிமா உலகமும் அறியும். அவரது திறமை குறித்து கூற வேண்டுமெனில் வெறும்  முகப்பூச்சு செய்து  கேமாரா முன் நிற்பவரல்ல அவர். அவரது  தொழில்நுட்ப அறிவும், கதாப்பாத்திரத்தை அவர் கையாளும் விதமும், திரைப்படம் பற்றிய அவரது தெளிவும் அளப்பரியது. அவர் “வால்டர்” படத்தின் காவலன் பாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார் என்றார்.

ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்கும் வால்டர் படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க சமுத்திரகனி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை - தர்மா பிரகாஷ்

ஒளிப்பதிவு - ராசாமதி

படத்தொகுப்பு - S. இளையராஜா

பாடல்கள் - அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி

கலை இயக்கம் - A.R. மோகன்

நடனம் - தாஸ்தா

சண்டைப்பயிற்சி இயக்கம் - விக்கி

தயாரிப்பு மேற்பார்வை - K மனோஜ் குமார்

புகைப்படம் - தேனி முருகன்

டிசைன்ஸ் - J சபீர்

No comments:

Post a Comment