Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Thursday 2 January 2020

புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய இயக்குநர் பா.இரஞ்சித்*

*புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய இயக்குநர் பா.இரஞ்சித்*

தமிழ்த்திரை உலகைப் பொறுத்தவரையில் இயக்குநர் பா.இரஞ்சித் முற்றிலும் மாறுபட்டவர். பொழுதுபோக்கிற்காக சினிமா என்பதைத் தாண்டி, மக்களை சிந்திக்க வைப்பதே சினிமா என்று பயணிப்பவர். சமூக அடுக்குகளையும், முரண்களையும் தன் படைப்புகளின் மைய உரையாடலாக எப்போதும் கையாள்பவர்.

"நீலம் பண்பாட்டு மையம்", " தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்", "கூகை திரைப்பட இயக்கம்" என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு அவர் உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.













புத்தாண்டு மற்றும் பீம்கோரேகான் நாளான ஜனவரி முதல் நாளில், ஓசூர் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா பகுதிகளில் இயக்குநர் பா.இரஞ்சித் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு "நீலம் பண்பாட்டு மையம்" ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள "அம்பேத்கர் அரசியல் பள்ளி",  "சட்ட ஆலோசனை மையம்", "விளையாட்டு மற்றும் கலைத்திறமைகள் பயிற்சி பள்ளிகள்", "அம்பேத்கர் நூலகங்கள்", "வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவோர் ஆலோசனை மையம்" போன்றவற்றை துவக்கி வைத்தார்.

வெவ்வேறு கிராமங்களில் நடந்த இந்நிகழ்வுகளில் இயக்குநர் பா.இரஞ்சித் முக்கியமாக முன்வைத்து பேசியதவாது,

"இந்தியாவில் மதத்தாலும், சாதியாலும் மக்களை பிரித்தாளுகிற சூழ்ச்சியானது நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே போகிறது. இந்த சூழலில் நமக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடியது புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் தான். அம்பேத்கர் தான் ஒளி. அவரை பின்பற்றினால் மட்டுமே நமக்கான விடுதலை சாத்தியம். நமக்குள் இருக்கிற முரண்களை களைந்துவிட்டு, நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டாக வேண்டிய மிகமுக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். எனவே தான் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் இவற்றையெல்லாம் செய்கிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் இதுபோல முன்னெடுப்புகளை செய்யவிருக்கிறோம். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பீம்கோரேகான் நாள் வாழ்த்துகள்" என்றார்.

இந்நிகழ்வுகளில் கர்நாடக   மற்றும் தமிழக அரசியல் ஆளுமைகள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பயணத்தின் போது பா.இரஞ்சித் திறந்து வைத்த "Jaibheem Law Clinic" இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாதது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment