தமிழ் பேசும் நடிகை நிம்மி நம்பிக்கை!
அண்மைக்காலத்தில் வந்த 'மேகி' படத்தில் நடித்திருப்பவர் நிம்மி.
இவருக்குச்
சொந்த ஊர் ஈரோடு. தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தவர். நடிப்பின் மீதும்
ஆர்வமும் பாத்திரங்களை ஏற்பதில் ஈடுபாடும் புதிதாக குணச்சித்திரங்களை
வெளிப்படுத்துவதில் தேடலும் உள்ள நம்பிக்கை தரும் நட்சத்திரமாக இருப்பவர்
இவர்.
ஒரு நடிகைக்கேற்ற துறுதுறுப்பும் இளமையும் இவரிடம் உள்ளன. அதனால்தான் விளம்பர பட வாய்ப்புகளும் வந்து நடித்துள்ளார்.
தமிழில்
நல்ல பாத்திரத்திற்காகக் காத்திருக்கிறார் இவர்.ஒரு தமிழ் பெண்ணுக்குரிய
தோற்றமும் குரலும் , தமிழை நன்றாக உச்சரிக்கும் திறமையும் இவரிடம்
இருக்கின்றன.
தமிழ் பேசும் சவாலான பாத்திரங்களுக்கு,உணர்வுகளை வெளிப்படுத்தும் வேடங்களுக்கும்
தன்னால் தீனி போட முடியும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார். தமிழ் பேசும் நடிகை தேடும் இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்தலாம்.
நம்பிக்கையோடு காத்திருக்கிறார் நிம்மி.அந்த நம்பிக்கை ஒரு போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment