Featured post

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ்

 *பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நட...

Saturday, 17 October 2020

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,

 மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,  

ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் பெருமையுடன் வழங்கும்  “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா !


மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத்துடன் பொருந்தி இருக்கும். இசையை படத்திலிருந்து தனித்து பிரிக்க முடியாது. அவரது படங்களின்  இசை, எப்போதும் ரசிகர்களை பிரமிக்க செய்வதாகவே இருக்கும்.  மிஷ்கின் படங்களில்  இசை ஒரு முக்கிய கதாப்பாத்திரம் போன்றே இருக்கும். உண்மையில் இது தான் அவரது படங்களில் பாடல்கள் மெகா ஹிட் ஆவதற்கான காரணமாகும். தற்போது  ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, மிஷ்கின் இயக்கும் "பிசாசு 2" படத்தில் நேர்த்தியான,  தேர்ந்த இசையை தொடர்ந்து தந்து வரும்   இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் இணைந்திருக்கிறார். படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், மிஷ்கின்  அதனை, மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் எனக்குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். 


இது குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது...



பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்கமுடியாத இசையும் ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியதுவம் விட்டுப்போய்விடக்கூடாது என நினைத்தேன். இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இக்கதையை கூற நினைத்தேன். தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக  இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான,  பல படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது.  அவருடன்  இசையமைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் பெரும் சந்தோஷத்தை தருவதாக அமைந்திருகிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன் என்றார். 



மேலும்  பிசாசு 2  படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறும்போது...


படத்தின் டைட்டில் லுக்கிற்கு ரசிகர்கள் தந்த பேராதரவை கண்ட போது,  பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.  அவர்களைப் போலவே நானும் "பிசாசு 2" ப்டத்தை  முழு வடிவமாக  பெரிய திரையில் காண  ஆவலுடன் உள்ளேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுதாக  பூர்த்தி செய்ய, படத்தின்  ஒவ்வொரு நொடியையும் வெகு கவனமுடன் செதுக்கி,  உருவாக்கி கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் என்னையும் இந்த கதையையும்  முழுதாக நம்பிய ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் நிறுவன தயாரிப்பாளர் T. முருகானந்தம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment