Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Thursday, 1 October 2020

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி

*ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே*

ரோம் - காம் எனும் ரொமான்ஸ் காமெடி வகை படங்களுக்கு இளைஞர்கள் மற்றும் குடும்பங்களிடையே, எல்லாக் காலத்திலுமே, சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வகை படங்கள் ரொமான்ஸ், காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயங்களால் எல்லைகள் கடந்து உலகம் முழுக்க அனைத்து வயதிலிருக்கும் மக்களையும் எளிதாக ஈர்த்து விடுகிறது. அந்த வகையில், தெலுங்கில் வெளியாகி பெரு வெற்றியடைந்த ரொமான்ஸ் காமெடி படமான  “பெல்லி சூப்புலு”  படம் தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ரீமேக்காகிறது. இப்படத்தை A Studios சார்பில் தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை  SP Cinemas மேற்கொள்கின்றனர்.  இப்படத்திற்கு தற்போது  “ஓ மணப்பெண்ணே” எனப் பெயரிடப்பட்டுள்ளது.




தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் படமாக உருவாகி வரும் இப்படத்தில் தமிழில் மேலும் ஒரு ஆச்சர்யமாக மற்றுமிரு நிறுவனங்கள் இப்படத்துடன் கைகோர்த்துள்ளன. Madhav Media மற்றும் Third Eye Entertainment நிறுவனம் தமிழில் இப்படத்தின் நெகடிவ் உரிமையை பெற்றிருக்கிறது.



இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற  இப்படத்தை தமிழில் தற்போது இளைஞர்களின் இதய நாயகனாக வளர்ந்து வரும் ஹரீஷ்கல்யாணை ஹிரோவாக வைத்து பெரும் நம்பிக்கையுடன் படத்தை தயாரித்துள்ளார்கள். இது படத்திற்கு படம் வளர்ந்து வரும் ஹரீஷ் கல்யாணின் பிரபல்யம் மீதும் மற்றும் படத்தின் கதை மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான “தாராளபிரபு” படம் விமர்சன ரீதியிலும் சரி, வர்த்தக ரீதியாகவும் சரி, பெரு வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் ஹரீஷ் கல்யாணின் நடசத்திர அந்தஸ்தை பல படிகள் உயர்த்தியுள்ளது. இது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.



தயாரிப்பாளர்கள் Madhav Media நிறுவனர் பாலாஜி கப்பா மற்றும் Third Eye Entertainment நிறுவனர் தேவராஜுலு மார்க்கண்டேயன்   ஆகியோர் நடிகர் ஹரீஷ் கல்யாணின் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படம் மூலம் பெரு வெற்றியை அடைந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.



தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாரயணா மற்றும் ரமேஷ் வர்மா பென்மட்ஷா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இயக்குநர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. வசனங்களை தீபக் சுந்தர்ராஜன், எழுதியுள்ளார்.  விஷால் சந்திரசேகர் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கிருபாகரன் செய்கிறார். கலை இயக்கத்தை சதீஸ்.K செய்துள்ளார். ஒலிக்கலவையை Knack Studios செய்துள்ளனர். படத்தின் ஒருங்கிணைப்பை முரளி கிருஷ்ணா செய்கிறார். க்வான் சவுத் ஏஜென்ஸி பார்டனராக பணியாற்றி உள்ளனர். தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொண்டுள்ளனர்.



தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் அறிவிப்பு பற்றி மிக விரைவில் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.



No comments:

Post a Comment