Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Thursday, 1 October 2020

மீண்டும் படப்படிப்பைத் துவங்கியது

மீண்டும் படப்படிப்பைத் துவங்கியது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்!

கொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா மீண்டும் செயல்படத் துவங்கியிருக்கிறது. பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது 18வது தயாரிப்பின் படப்பிடிப்புப் பணிகளை மீண்டும்


துவங்கியிருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் ஷர்வானந்த் உடன் ரீத்து வர்மா, அமலா அகினோனி, சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இப்படத்தை ஸ்ரீகார்த்திக் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகின்றார். இப்படத்தின் மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் நடிகை அமலா.

மீண்டும் தமிழ்சினிமாவில் படப்படிப்பு வேலைகள் துவங்கியது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நாங்கள் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக எதிர்பார்க்கிறோம்!’’.

No comments:

Post a Comment