Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Saturday, 24 October 2020

என் இசையால் உயிர் கொடுப்பேன்

 என் இசையால் உயிர் கொடுப்பேன் - இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி


ஒரே வாரத்தில் ஒரு மில்லியனை கடந்த இசை ஆல்பம் - பாராட்டு மழையில் இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி


இசை ஆல்பம் மூலம் கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர்


தமிழகத்தில் இசை ஆல்பங்கள் மீண்டும் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில், ‘ஹார்ட் பிரேக்கர்’ என்ற இசை ஆல்பம் 

இளைஞர்களின் சமீபத்திய பேவரைட் ஆல்பமாக வரவேற்பை பெற்றுள்ளது. இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி 

இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை நிறுவனமான திங்க் மியூசிக் தயாரித்துள்ளது.


கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான ‘ஹார்ட் பிரேக்கர்’ குறுகிய நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது 

இசை உலகையே வியப்பில் ஆழ்த்தியிருப்பதோடு, இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமியின் மீது கோலிவுட்டின் பார்வையையும் பட 

வைத்துள்ளது.


கோயமுத்தூரை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த மனோஜ் சின்னசாமி, ஆரம்பத்தில் இசை ரசிகராக இருந்தாலும், தனக்கு 

இருக்கும் இசை ஆர்வத்தினால், வெறும் ரசிகராக மட்டும் இன்றி இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஐடி 

துறையில் இருந்து இசைத்துறைக்கு வந்திருக்கிறார்.


ஏதோ, பாடல்கள் கேட்டும், இசையமைத்தோம், என்று இல்லாமல் முறைப்படி சங்கீதம் படித்தவர், சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் 

இசைப் பள்ளியில் முறைப்படி இசையை படித்து பட்டம் பெற்றார். பிறகு பல்வேறு விளம்பர படங்களுக்கு இசையமைத்ததோடு, ‘முத்தழகி’ உள்ளிட்ட இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.


மனோஜ் சின்னசாமியின் இசை ஆல்பங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை கவனித்த திங்க் மியூசிக் நிறுவனம் அவருக்கு 

வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அதன் மூலம் திங்க் மியூசிக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘ஹார்ட் பிரேக்கர்’ இசை ஆல்பத்திற்கு 

மனோஜ் சின்னசாமி இசையமைத்திருக்கிறார்.


ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் ஆகியோரது வரிசையில், சிறப்பான மெட்டுக்களோடு, இசையில் பல்வேறு வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கும் மனோஜ் சின்னசாமி, மெலோடி பாடல்களை வெஸ்ட்டன் டைப்பில் கொடுப்பதில் வல்லவராக உள்ளார். அவரது இந்த தனித்துவம் தான் தற்போது அவர் மீது கோலிவுட் பார்வையை பட வைத்துள்ளது.


இசைத்துறையில் நிச்சயம் சாதித்து காட்ட வேண்டும், என்ற நம்பிக்கையோடு வலம் வரும் மனோஜ் சின்னசாமி, பாட்டுக்கு மெட்டு 

அல்லது மெட்டுக்கு பாட்டு, என்று எந்த முறையிலும் பணியாற்றக் கூடிய திறமை படைத்தவராக இருப்பதோடு, ஒரு திரைப்படத்தை 

முழுவதுமாக எடுத்துவிட்டு, பிறகு அதற்கு இசையமைக்க வேண்டும் என்றால் கூட, தனது இசை மூலம் அதற்கு உயிர் கொடுக்கும் 

திறமை படைத்தவராக திகழ்கிறார்.


தற்போது அவரது ஹார்ட் பிரேக்கர் இசை ஆல்பத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட பல ஜாம்பவான்களிடம் 

பாராட்டு பெற்று வரும் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி, விரைவில் கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 

பாராட்டு பெறப் போவது உறுதி.

No comments:

Post a Comment