Featured post

Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, Anil Ravipudi, Sahu Garapati, Shine Screens’s #VenkyAnil5 #NkrAR2,

 Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, Anil Ravipudi, Sahu Garapati, Shine Screens’s #VenkyAnil5 #NkrAR2, Presented By Suresh Productions...

Thursday, 17 December 2020

பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை

 பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது ! 


 “ஷகிலா”  பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை  ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில்   ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது.  அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது. இப்படம் நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. மலையாள பதிப்பு கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும். 





இப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள். 


ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தை  தயாரித்துள்ளார்கள். பிரகாஷ் பழனி இப்படத்தை வழங்குகிறார். சந்தீப் மலானி அஸோசியேட் புரடியூசராக பணிபுரிந்துள்ளார். சந்தோஷ் ராய் பதாஜே ஒலிப்பதிவு செய்ய, பல்லு சலூஜா படத்தொகுப்பு செய்துள்ளார். ஷம்மியின் Magic Cinema, Innovative Film Academy மற்றும் பழனியின் International Media Works நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகிறது. கேரளா பகுதிகள் போன்று இருக்கவேண்டுமென கர்நாடகாவின் தீர்த்தஹல்லி பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி பெங்களூருவின் Innovative Film City யில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் மூன்று பாடல்கள் அமைந்துள்ளது. டைட்டில் பாடல் பாலிவுட் இசையமைப்பாளர் Meet Bros இசையமைத்துள்ளார். மற்ற இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் வீர் சமர்த் இசையமைத்துள்ளார். 


படத்தில் கையாளப்பட்டுள்ள தீரமான மொழியான்மைக்காவும், மிக கனமான காட்சிகளுக்காகவும் படத்திற்கு சென்சாரில்  A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் சென்சார் ஃபோர்ட் கமிட்டியால் இப்படம் பாராட்டு பெற்றுள்ளது. அவர்கள் இப்படத்தின் கருத்துக்களை  பாரட்டி படத்திற்கு  தங்களின் நன்மதிப்பை வழங்கியுள்ளனர்.  


இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது. Zee Music நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது. UFO Moviez இப்படத்தை வெளியிடுகின்றனர்.

No comments:

Post a Comment