Featured post

Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from

 *Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from Sekhar Kammula’s Bilingual Cinematic Spectacle Kuberaa* S...

Thursday, 1 April 2021

அன்புள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கு,

 அன்புள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கு,  


சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் மஞ்ச சட்ட பச்ச சட்ட” திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் தம்பா குட்டி பம்ப்ராஸ்கி. இந்த படத்தின் ஒளிப்பதிவை எம் ஆர் எம் ஜெய்சுரேஷ் கவனிக்கஇசையை கணேஷ் ராகவேந்த்ரா அமைக்கிறார். இத்திரைப்படத்தின் முக்கிய கதா பாத்திரத்தில் குரு சோமசுந்தரம் ஏற்று நடிக்க புதுமுகம் ஆதித்ய வர்மன் மற்றும் ரேணு சௌந்தர் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படம் சென்னையை சுற்றியுள்ள தளங்களில் காட்சிப் படுத்த உள்ளது. 






 ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கும் சுயநல கார்போரேட் ப்ரோக்கருக்கும் இடையே ஒரு விரோதம் ஏற்படுகிறதுஅதன் விளைவாக அரசியல்வாதியின் வீட்டில் வருமானவரி சோதனை நடைப்பெறுகிறது. அதே நாளில் தங்களை கண்டுக்கொள்ளாத சமூகத்திற்கு ஒரு ஏடிஎம் கொள்ளையை நடத்திக் காட்ட இரு இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த இரண்டு முயற்சியும் தோல்வியை தழுவுகிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட இதில் சிக்கிக்கொள்கிறான் கதாநாயகனும் அவன் நண்பனும்.

பணம் சம்பாதிக்க தெரியாத கதநாயகன்பணம் சம்பாதிக்க தெரியாத போலீஸ் அதிகாரிசுயமாக சிந்திக்க தெரியாத இரண்டு போலீஸ்காரர்கள்சுயநினைவே இல்லாத இரண்டு மனநோயாளிகள்பேராசை கொண்ட அரசியல்வாதியின் உதவியாளர் என அனைவருமே ஒரு ஜாக்பாட்டை நோக்கி ஓடுகிறார்கள். அந்த ஜாக்பாட் என்ன ஆனது என்னும் இக்கதையை ஒரு தோல்பாவைக் கூத்து வழியாக சொல்கிறான் கதை சொல்லி. இந்த படம் பர்லஸ்க் காமெடி வகை படம்.

இப்படம் ஏப்ரல் 2  திரையரங்கில் வெளியாகிறது.

No comments:

Post a Comment