Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Monday, 19 April 2021

நினைவில் நீங்கா, நகைச்சுவை நாயகர் “விவேக்” அவர்களுக்கான

 நினைவில் நீங்கா, நகைச்சுவை நாயகர் “விவேக்” அவர்களுக்கான   அஞ்சலியுடன்,   நடிகர் உதயநிதி  நடிக்கும், “ஆர்ட்டிகள் 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு !!!



நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “ஆர்ட்டிகள் 15” படத்தின் தமிழ் பதிப்பு,  கடந்த 10 நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கியது.  இந்நிலையில் இன்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.  முன்னதாக படப்பிடிப்பு துவங்கும் முன்னர் மொத்த படக்குழுவும், மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்தியில் வெளியான “ஆர்டிகள் 15” மூல படம், இந்தியா முழுக்கவெ பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில்,    தமிழ் பதிப்பு  அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இங்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு  எகிறியுள்ளது. சமீப காலங்களில் நடிகர் உதயநிதி அழுத்தமான கதைகளில் சிறந்த கதாப்பாத்திரங்களில் தன்னை பொருத்திகொண்டு, ரசிகர்களிடம் நல்ல நடிகர் என்ற பாராட்டை பெற்றிருக்கிறார். தொடர் வெற்றிகளால், அவர் படங்களுக்கு விநியோக தளத்திலும் மிகுந்த மதிப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் மூலமும் அவர்  மேலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் “கனா” படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம்  எல்லைகள் கடந்து கவனம் ஈர்த்த இயக்குநர் அருண்ராஜ் காமராஜ் இப்படத்தை இயக்குவது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 


இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தை Romeo Pictures சார்பில் ராகுல் தயாரிக்கிறார். Bayview Project LLP மற்றும்  Zee Studios நிறுவனங்கள் இப்படத்தினை இணைந்து வழங்குகின்றனர். Bayview Project LLP மற்றும் Zee Studios நிறுவனங்கள் தமிழில் “நேர் கொண்ட பார்வை” படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை  பெற்றுள்ளனர்.  மேலும்  தமிழ் ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பு மிக்க அஜித்குமாரின் “வலிமை” படத்தினை தற்போது தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனங்களின் சார்பில் உருவாகும் இப்படமும் மிகப்பெரும் வெற்றியை பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment