Featured post

Oru Nodi Producers Gift a Car to Director Mani Varman!

 *Oru Nodi Producers Gift a Car to Director Mani Varman!*  "Oru Nodi", a Taut and Gripping Crime-Thriller, released last week is a...

Wednesday 14 April 2021

டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு

 *'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!*


ஒரு நல்ல கதை தனக்கான  நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் 'டிரைவர் ஜமுனா' கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.



'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான  எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழி களில்  தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கி ப்டப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.


சென்னையில் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படப்பூஜை நடத்தி, படப்பிடிப்பை மும்முரமாக தொடங்கி நடத்தி வருகிறது படக்குழு.  தினமும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். 'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.  கிரைம்  த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி  டிரைவராக நடிக்கிறார். 


நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்துவிட்டால், படத்தின் கதையோட்டத்தை எளிமையாக மக்களுக்கு உணர்த்திவிடுவார்கள். அந்த வரிசையில் படத்தின் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகளை அனல் அரசு, எடிட்டராக 'அசுரன்' எடிட்டர் ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 


இன்றைய கால கட்டத்தில் தினசரி  வாழ்க்கையில் கால்  டாக்ஸி டிரைவர்களை  கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால்  டாக்ஸி  டிரைவரை மையமாக  கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment