Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Tuesday, 20 April 2021

இனி நான் 'பேபி' நயன்தாரா அல்ல

 *இனி நான் 'பேபி' நயன்தாரா அல்ல.. மிஸ்.நயன்தாரா சக்ரவர்த்தி!* 

*ரஜினியுடன் நடித்த குழந்தை நட்சத்திரம்.*

மலையாளத்தில் ' கிலுக்கம் கிலுகிலுக்கம் ' படத்தின் மூலம் அறிமுகமானவர் *' பேபி ' நயன்தாரா*.  மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு,மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றார். ரஜினியின் 'குசேலன்' படத்தில் நயன்தாராவுடன்  நடித்தார் 'பேபி' நயன்தாரா. அப்போது முதல் நாள்  என்னை பார்த்த நயன்தாரா  சேச்சி என்னிடம்.. *" நீ தான் என் பெயரை திருடியவளா " என்று தமாஷாக கேட்டார். அதற்கு பேபி நயந்தாரா, நீங்கள் தான் என் பெயரை வைத்துள்ளீர்கள். நான் பிறக்கும் போதே நயன்தாராவாக தான் பிறந்தேன் வேண்டுமென்றால் என் பிறப்பு சான்றிதழ்/ birth certificate காட்டவா ? என்று நான் சிறுபிள்ளை தனமாக பதில் சொல்ல அவர் விழுந்து விழுந்து சிரித்தாராம் நயந்தாரா.








ரஹ்மான் நாயகனாக நடித்த மலையாள படம் 'மறுபடி' தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த கடைசி படம். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்த சில காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்ற தன்னை தயார் படுத்தியுள்ளார் . 'பேபி' நயன்தாரா வாக அல்ல..ஹீரோயின்  'மிஸ்'நயன்தாரா சக்ரவர்த்தியாக இனி வலம் வர உள்ளார். இதை அவரே தனது  பிறந்த நாளான இன்று (ஏப்ரல் 20) அறிவித்துள்ளார். எர்ணாகுளம் தேவராவிலுள்ள புனித இருதய கல்லூரி(Sacred Heart College)யில் மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம் (Mass communication and Journalism) முதலாமாண்டு மாணவியாக சேர்ந்துள்ள நயன்தாரா சக்ரவர்த்திக்கு தமிழில் நாயகியாக அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதனாலேயே தமிழில் கதை கேட்டு வருகிறார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா இந்த 'மலையாள நாட்டு சுந்தரி’ யையும் அரவணைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment