Featured post

ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival: இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க

 ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival: இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” ~ திருப்பங்களும் கொண்...

Thursday, 3 June 2021

தேசிய அளவிலான மாணவர்களின் திறனறியும் போட்டியின் முதல் நிலை

தேசிய அளவிலான மாணவர்களின் திறனறியும் போட்டியின் முதல் நிலை தேர்வில் சென்னை வேலம்மாள் நிறைநிலைப் பள்ளி மாணவர் மாபெரும் சாதனை*

மாணவர்களுக்கான தேசிய அளவிலான திறமையாளர்கள் தேடலின்  முதல் நிலை தேர்வில் சென்னை, முகப்பேரில் அமைத்துள்ள வேலம்மாள் நிறைநிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும்
ஸ்ரீ ராகவ், 183 மதிப்பெண்கள் பெற்று முன்னேறியுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மாணவர்களின் திறனறியும் தேடலின் முதல் நிலை தேர்வில் (என்.டி.எஸ்.இ.) தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவிலான மாணவர்களின் திறனைச் சோதித்தறிய மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 35000 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் அனைவரும் அடுத்த நிலைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வேலம்மாள் கல்வி நிறுவனம் எப்போதும் தரமான கல்விக்காகத் தன்னை நிரூபித்து வருவது உலகறிந்த உண்மை. இந்நிலையில், தங்கள் மாணவர்களின்  செயல் திறனை வாழ்த்துவதோடு, அவர்களின் அறிவுத்திறன் மேலும் மேலும் வளர ஆசீர்வதிக்கிறது.

No comments:

Post a Comment