Featured post

Sathyabama Shines Bright with Unprecedented

"Sathyabama Shines Bright with Unprecedented Success in Placements!: Excellence Day 2024"* Sathyabama Institute of Science and Tec...

Wednesday 7 July 2021

வேலம்மாள் மாணவர் உலகின் மிகப்பெரிய

                             வேலம்மாள் மாணவர் உலகின் மிகப்பெரிய
                                    மொசைக் ஓவியத்தை வடிவமைத்தார்


முகப்பேர்  கிழக்கில் உள்ள வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளியின்
மாணவன் மாஸ்டர் எம். தர்ஷன், உலகின் மிகப்பெரிய மொசைக் ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.   இந்திய மருத்துவர், கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்டவரும் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சராகவும் பணியாற்றியவருமான  பாரத ரத்னா டாக்டர் பிதன் சந்திர ராய் அவர்களின் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். இந்த இளம் கலைஞர்  6.5 அடி உயரமும் 5.5 அடி அகலமும் கொண்ட உருவப்படத்தை 950 ரூபிக் கியூபுகளைக் கொண்டு மிகத் துல்லியமாக 7 மணி நேரத்தில் வடிவமைத்துள்ளார்.


 தற்போதைய இந்தச் சவாலான காலங்களில்,சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக,  இரவும் பகலும் அயராது உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் மொசைக் ஓவியம் தயாரிக்கப்பட்டது

அவரது மகத்தான முயற்சியில் பெருமிதம் கொள்கின்ற பள்ளி, மாஸ்டர் தர்ஷனை இந்த பெருமைக்குரிய சாதனைக்காக வாழ்த்துகிறது மற்றும் இந்த உலக மருத்துவர்கள் தினத்தில் அனைத்து வீரம் மிக்க COVID வீரர்களையும் அவர்கள் செய்த தியாகத்தையும் அன்புடன் நினைவு கூர்கிறது. 

No comments:

Post a Comment