Featured post

திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா

 *திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்* *கவின் – பிரியங்கா மோகன் ஜோ...

Friday, 1 October 2021

வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்

வேலம்மாள்  பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்   தொடர் வெற்றி பெற்று சாதனை


    தமிழ்நாடு பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய மாநில அளவிலான 
கூடைப்பந்து சதுரங்கம், கேரம், கபடி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் சமீபத்தில் அரக்கோணம் பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தன.
இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட  விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

 
இதில் கலந்து கொண்ட பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் கூடைப்பந்து அணி
 17 வயதிற்கு  உட்பட்டோருக்கான கூடைப்பந்து மற்றும் கோ-கோ ஆகிய இரண்டு போட்டிகளிலும் ஆண்கள் பிரிவில் முதலிடமும் ,

 


  
14 வயதுக்கு  உட்பட்டோருக்கான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் இரண்டாவது இடமும், 17 வயதிற்கு  உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு  கபடி போட்டியில் இரண்டாம் இடமும்,
17 வயதிற்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் மூன்றாமிடமும் பெற்று வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றினர்.

இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவர்கள் விரைவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்படுவர் .

மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும்,கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

வேலம்மாள் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் தொடர் வெற்றியைப்
பாராட்டி வாழ்த்தியது.




No comments:

Post a Comment