Featured post

Amoham Studios White Lamp Pictures Subhashini K presents

 *Amoham Studios White Lamp Pictures Subhashini K presents* *Filmmaker B. Manivarman Directorial* *Taman Akshan-Malvi Malhotra starrer “Jenm...

Friday, 15 October 2021

ஜெய் பீம் டீஸர் வெளியானது: வழக்கறிஞராக மிளிரும் சூர்யா

         ஜெய் பீம் டீஸர் வெளியானது: வழக்கறிஞராக மிளிரும் சூர்யா


தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம்.

அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. 



சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

வெளியாகவுள்ள  நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது.

தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒழுங்காக ஒரு கூரையில்லாத, ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை ஜெய் பீம் விவரிக்கிறது.

சமூக அநீதியும், மனிதர்களின் மிருகத்தன்மையும் இந்த அப்பாவி உயிர்களை பாதிக்க, வழக்கறிஞர் சந்துரு இவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறார். விறுவிறுப்பான, மிகத் தீவிரமான ஒரு கதைக்கரு மனதைப் பிசையும், அதே சமயம் நெகிழவும் செய்யும் ஒரு களத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டத்தை இந்த டீஸர் காட்டியுள்ளது. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெய் பீம் திரைப்படத்தின் இணைதயாரிப்பை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கவனிக்க, ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர், படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ், கலை இயக்கம் கதிர்.

 
நவம்பர் 2ஆம் தேதி, , தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது



No comments:

Post a Comment