Featured post

Mahasena Movie Review

Mahasena Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mahasena படத்தோட review அ பாக்க போறோம். Vemal, Srushti Dange, Yogi Babu, Kabir Duhan Singh...

Friday, 15 October 2021

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெற்றி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்

 சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெற்றி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி!


மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு. அப்படி ஒரு வலுவான கதைக் களத்தோடு உருவாகும் படம் ’ரெட் சேன்டில்’. 


இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார்.




வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். முக்கியமான வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், 'கர்ணன்' ஜானகி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


‘கழுகு’ சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


படம் குறித்து இயக்குநர் குருராமானுஜம் கூறியதாவது,


இது ஆக்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம். 2015 ல் நடந்த உண்மைச் சம்வத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களின் உயிர் போலீஸ் தோட்டக்களுக்கு இரையானது என்பது வரலாறு. உண்மையில் இதுப் போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து இத் தொழிலில் ஈடுபட வைக்கிறார்கள. 



கதை ரேணிக்குண்டாவில் நடக்கிறது.  செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் விளிம்பு நிலை  வாழ்க்கையை பற்றி சொல்லும் இந்தப் படம் கமர்ஷீயல் அம்சங்களோடு உருவாகியுள்ளது.


வனப் பகுதியில் நடக்கும் கதை என்பதால் காட்டில் உள்ள சிறிய உயிரினங்கள் முதல் பெரிய விலங்குகள் வரை அனைத்து மிருகங்களின் ஓசையையும் நுட்பமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்.


‘ஆஸ்கார்’ நாயகன் ரசூல் பூக்குட்டி சாரிடம் படத்தைக் காண்பித்தபோது, ‘இது விருதுகளுக்கு தகுதியானப் படம்‘ என்று வாழ்த்தியதோடு அவரே சவுண்ட் டிசைனிங் பணிகளை மேற்கொள்வதாக சொல்லிய அந்த தருணம் பெருமைக்குரியது. 


சாம்.சி.எஸ், யுகபாரதி கூட்டணியில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளன.  


 JN சினிமா நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை  தயாரித்துள்ளார் பார்த்தசாரதி.



அடித்தட்டு மக்களின் வாழ்வியலைச் சொல்லும் இந்தப் படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக பொழுதுப்போக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளதே இதன் தனிச் சிறப்பு’ என்றார்.


அனைவருக்கும் இனிய விஜய தசமி வாழ்த்துகள்!


நன்றி!


குருராமானுஜம் (இயக்குநர்)


ப்ரியா (மக்கள் தொடர்பாளர்)

No comments:

Post a Comment