Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Saturday, 9 October 2021

GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன்

 GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் வழங்கும், தினேஷ்  லக்ஷ்மணன்  இயக்கத்தில்,  ஆக்‌ஷன் கிங் அர்ஜீன்,  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  உருவாகும், க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது  !  



மிக சமீபத்தில், கடந்த மாதத்தில் தான் ஆக்சன் கிங்  அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும்  ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில், அதற்குள்ளாகவே படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை முடித்த செய்தியை, படக்குழு அறிவித்துள்ளது. 





GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் இது குறித்து  கூறியதாவது ...


எங்கள் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை காண,  மிக மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் தனது திறமையான இயக்கத்தின் மூலம், திட்டமிட்ட காலகட்டத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளார். விரைவில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளோம். 



முன்பே குறிப்பட்டது போல் இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை,  இது மன இறுக்கம் கொண்ட  ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை  மையமாக கொண்டு உருவாகும்  திரைப்படம் ஆகும். எந்த வித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்  இந்த படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 



இப்ப்டத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), விக்கி (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு )பணிகளை செய்துள்ளனர். ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய  பிரபலங்கள் இணைந்து  நடிக்கின்றனர்.


இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன்  எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, GS ARTS சார்பில் தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிக்கிறார்.

No comments:

Post a Comment