Featured post

Phoenix Veezhan Movie Review

 Phoenix Veezhan Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pheonix  படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இது ஒரு sports  action drama . இந்த ப...

Wednesday, 13 October 2021

அகில இந்திய JEE மெயின் 2021 தேர்வுகளில் திறந்தவெளிப்

 அகில இந்திய JEE மெயின் 2021 தேர்வுகளில் திறந்தவெளிப் பிரிவில் சிறந்து விளங்கும் வேலம்மாள் பள்ளி மாணவர்கள்

2021 ஆம் ஆண்டிற்கான JEE மெயின் தேர்வுகளில்    வேலம்மாள் நெக்ஸஸ் மாணவர்கள்  பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.  முதன்மையாக , மாணவி P R K அமிழ்தினி அகில இந்திய அளவில் 21ஆம் இடத்தையும், மாஸ்டர் கிருபாகரன் (அ.இ.அ)  36 ஆம் இடத்தையும்,மாஸ்டர் சச்சின் சாகர்  (அ.இ.அ)  47 ஆம் இடத்தையும்,
மற்றும் மாணவி நம்ரிதா  (அ.இ.அ)  78 -ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்மேலும் இச்சாதனைப் பட்டியல் B.E., B.Tech மற்றும் B. Planning என பல்வேறு பிரிவுகளிலும் தொடர்கிறது.


2021 ஆம் ஆண்டிற்கான

 
இந்த அகில இந்தியத் தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளமைக்கு வேலம்மாள்-ஸ்டார்  கல்வி நிறுவனம் அடிப்படைக் கருவியாக இருந்தது, இதில் 94 சதவிகித மாணவர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ்- தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர் மேலும் என்.ஐ.டி.யின் தரவரிசையில் 88 சதவிகித இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இந்த முடிவுகள் வேலம்மாளின் தரமான கல்வித் திட்டங்களை அங்கீகரிக்கின்றன.


 வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திரு. எம்.வி.எம்.வேல்மோகன், மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனைப் பாராட்டி வாழ்த்தினார். மேலும் இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த வேலம்மாள் நெக்ஸஸ் ஆசிரியர் குழுவின் நிபுணத்துவ தொழில்முறை வழிகாட்டுதலையும் பாராட்டினார்.  



No comments:

Post a Comment