Featured post

Megastar Mammootty Visits the Location of Dulquer Salmaan’s Film ‘I Am Game

 Megastar Mammootty Visits the Location of Dulquer Salmaan’s Film ‘I Am Game’* Megastar Mammootty paid a visit to the location of "I Am...

Sunday, 17 October 2021

RANA PRODUCTIONS ராணா புரொடக்‌ஷன்ஸ்

 RANA PRODUCTIONS  ராணா புரொடக்‌ஷன்ஸ் 

விஷால் நடிக்க, 

ஐந்து மொழிகளில் “லத்தி” . 

         

நடிகர்கள்

ரமணா, நந்தா  இணைந்து தயாரிக்கும் ராணா புரொடக்‌ஷன்ஸ்  முதல் தயாரிப்பில் 

விஷால் நடிக்கும் புதியபடதிற்கு 

“லத்தி” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படம், 

தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. 

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமானது. 

 

விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகும் #எனிமி படத்தின் தமிழ்,தெலுங்கு டப்பிங் வேலைகள் செய்து வருகிறார். 

மற்றும் #வீரமேவாகைசூடும் படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடை பெற்று வருகிறது. 

இதை தொடர்ந்து “லத்தி” படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறும். 



விஷாலுக்கு  ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 



சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A.வினோத் குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார். 

வசனம்: A.வினோத் குமார்/பொன்பார்த்திபன். 

சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, 

பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். 

திலீப்சுப்பராயன் ஸ்டண்ட் காட்சி அமைக்கிறார். 

எடிட்டிங்:N.B.ஶ்ரீகாந்த்

கலை:எஸ்.கண்ணன் 



No comments:

Post a Comment