Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Monday, 11 September 2023

நந்தமுரி கல்யாண் ராமின் பீரியடிக் ஸ்பை த்ரில்லர் படமான 'டெவில்' படத்தில் சம்யுக்தா

நந்தமுரி கல்யாண் ராமின் பீரியடிக் ஸ்பை த்ரில்லர் படமான 'டெவில்' படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.*



நடிகர் நந்தமுரி கல்யாண் ராம்  தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு  சுவாரஸ்யமான திரைக்கதையுடன்  ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  மேலும்  இது பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன்  வருவது குறிப்பிடத்தக்கது. 


இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.  நடிகை சம்யுக்தா இப்படத்தில் கல்யாண் ராம் ஜோடியாக நடிக்கிறார். மலையாள நடிகையான சம்யுக்தா  இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 11) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 


சம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு, டெவில் படத்தில் சம்யுக்தா நடிக்கும்  நிஷாதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் , சம்யுக்தா பாரம்பரிய தோற்றத்தில் இனிமையான புன்னகையுடன் காணப்படுகிறார். அவரது தெய்வீகமான லுக்  ரசிகர்களால் மலர்கள் கொண்டு பூஜித்து வழிபடுமளவு சிறப்பாக அமைந்துள்ளது. 


நந்தமுரி கல்யாண் ராம், ‘டெவில்’ படத்தில் ஒரு ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக நடிக்க இருக்கிறார். கடந்த ஆண்டு தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த 'பிம்பிசாரா' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கல்யாண் ராம், இந்த ஆண்டு 'டெவில்' படத்தின் மூலம் அனைவரையும் கவரத் தயாராகி வருகிறார்.


தேவன்ஷ் நாமா வழங்கும் இத்திரைப்படத்தை, அபிஷேக் பிக்சர்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் நாமா  தயாரித்து இயக்குகிறார். டெவில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை ஸ்ரீகாந்த் விசா வழங்கியுள்ளார். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த ஸ்பை த்ரில்லர் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்படும்.

No comments:

Post a Comment