Featured post

*#தளபதி-69 பத்திரிகை செய்தி!*

 *#தளபதி-69 பத்திரிகை செய்தி!* கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான 'தளபதி'விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தம...

Monday 4 September 2023

கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படத்தின் தற்போதைய நிலவரம்

 *"கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படத்தின் தற்போதைய நிலவரம்.*


மக்கள் கருமேகங்கள் கலைகின்றன படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன.  படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன. இதனால் நேற்று பல திரையரங்கங்கள் நிரம்பி இருக்கின்றன.


இன்றிலிருந்து கூடுதலான காட்சிகளை ஒதுக்கியதுடன் அதிகப்படியான காட்சிகளை குடும்பத்தினருடன் காண்பதற்கு வசதியாக 2.30, 6.30 காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது.


இதுவரை திரையிடாத பல ஊர்களிலும் நேற்றிலிருந்து புதிய அரங்கங்களில் படத்தை திரையிடத் தொடங்கி விட்டனர்.


எத்தகைய மாற்றங்களும் மக்கள் நினைத்தால் மட்டுமே நிகழும். கருமேகங்கள் கலைகின்றன இப்பொழுது படம் பார்ப்பவர்களின் கைக்கு சென்றுவிட்டது! யாருக்காக இப்படைப்பு உருவாக்கப்பட்டதோ அவர்கள் இனி இதைக் கொண்டு சென்று அனைவருக்கும் சேர்த்து விடுவார்கள் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது!!


- தங்கர் பச்சான்

No comments:

Post a Comment