Featured post

என் காதலே' சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி

 *'என் காதலே' சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி* *Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி ...

Sunday, 3 September 2023

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர்

 *பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!*





தனது மார்க்கெட்டை ஒவ்வொரு படத்திலும் விரிவுபடுத்தி வரக்கூடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் வர்த்தக வட்டாரத்தில் ஃபாக்ஸ் ஆஃபிஸ் கஹாநாயகனாக மாறியுள்ளார். அவருடைய 'பார்க்கிங்' படம் குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்  அதிகரித்துள்ளன. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருக்கிறார்கள்.


படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் சரியான செயலாக்கம் என குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.


‘பார்க்கிங்’ படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்‌ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலி கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்புகள்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.


திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

No comments:

Post a Comment