Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Tuesday 5 September 2023

மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர்

 *மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ டிரெய்லர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது!*



கிரிக்கெட்டின் டெமி-காட் சச்சின் டெண்டுல்கர் முதல் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்களான வெங்கட் பிரபு, பா, இரஞ்சித் மற்றும் பலரும் இருக்க முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான '800' இன் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது.


இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதியின் '800' படத்தின் ட்ரெய்லரில் உள்ள இறுதி வரிகள் மேலோட்டமாகப் பார்த்தால் எளிமையாகத் தோன்றினாலும் அந்த வரியில் உள்ள உணர்ச்சிகள் ஆழமானது. மும்பையில் நடைபெற்ற '800' படத்தின் பிரமாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழாவைக் கண்டு நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்கள், விளையாட்டு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகத்தைச் சேர்ந்த ஐகான்கள் அடங்கிய ஒட்டுமொத்தக் கூட்டமும் பரவசமடைந்தது.


கிரிக்கெட்டின் டெமி-கடவுள் சச்சின் டெண்டுல்கர், இலங்கையின் மிகவும் பிரபலமான சர்வதேச கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனுடன் தனது அன்பை இந்த நிகழ்வில் வெளிப்படுத்தினார். அவர் தனது மாயாஜால சுழல்களால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் கவர்ந்தவர்.


விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு, இயக்குநர் ஸ்ரீபதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


ஒட்டுமொத்தத் திரையுலகமும், ஊடக உலகமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும், உணர்ச்சிப்பூர்வமாக நம்மை உடனடியாக இணைக்கும் '800' படத்தின் மிகச்சிறந்த டிரெய்லரைப் பற்றிப் பாராட்டி வருகின்றனர். முத்தையா முரளிதரனாக வரும் மதுர் மிட்டலின் திரை பிரசன்ஸ், ஆர்.டி.ராஜசேகரின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரானின் இசை ஆகியவை இந்த டிரெய்லரின் மிகப்பெரிய பலம்.


*நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரம்:*

நடிகர்கள்: மதுர் மிட்டல் / மஹிமா நம்பியார்,

இயக்கம்: எம்.எஸ்.ஸ்ரீபதி,

தயாரிப்பு: மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்,

இசையமைப்பாளர்: ஜிப்ரான்,

ஒளிப்பதிவாளர்: ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி,

எடிட்டர்: பிரவீன் கே.எல்,

எழுத்து: எம்.எஸ்.ஸ்ரீபதி & ஷெஹான் கருணாதிலக,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: விதேஷ்,

ஆடை வடிவமைப்பாளர்: பூர்தி பிரவின் / விபின் PR

தோற்ற வடிவமைப்பாளர்: அனிதா மட்கர்,

ஆக்‌ஷன்: டான் அசோக்,

ஸ்போர்ட்ஸ் கோரியோகிராபி: துருவ் பஞ்சாபி,

VFX மேற்பார்வையாளர்: ஜிதேந்திரா,

லைன் புரொடியூசர்: கந்தன் பிச்சுமணி,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன்.

No comments:

Post a Comment