Featured post

Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan

 *'Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan has popular Malaysian actor Yuvaraj Krishnasam...

Wednesday 6 September 2023

வெப்பன்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

 *'வெப்பன்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*










நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'வெப்பன்'. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற்றது. 


நிகழ்வில் இயக்குனர் குகன் பேசியதாவது, "என் தயாரிப்பாளர் மன்சூர் சார், அஜீஸ், அப்துல் இவர்களுக்கு நன்றி. எந்த ஒரு தயாரிப்பாளரும் இந்த கதைக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் தர யோசிப்பார்கள். என் கேரியரில் நிச்சயம் இது மிகப் பெரிய படி. கதையில் நம்பிக்கை வைத்து சத்யராஜ் சார் ஓகே சொன்னதும் படம் இன்னும் பெரிதானது. அவருக்கு நன்றி. அடுத்து வசந்த் ரவி சாரும் கதையின் மீது நம்பிக்கை வைத்தார். டிசி, மார்வெல் போல புதிய ஒரு உலகை உருவாக்க விரும்பினோம். ராஜீவ் மேனன் சார் சிறப்பாக செய்துள்ளார். தான்யா ஹோப் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அனைவருக்கும் நன்றி".   


நடிகை தான்யா ஹோப், "'வெப்பன்' படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் குறித்து அதிகம் நான் இங்கு சொல்ல முடியாது. நல்ல கான்செப்ட், வித்தியாசமான கதை. படம் பார்க்குபோது உங்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் குகன், தயாரிப்பாளர் மன்சூர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி"


நடிகர் ராஜீவ் கோவிந்த் பிள்ளை, "தென்னிந்தியாவில் இது போன்ற ஒரு சூப்பர் ஹுயூமன் யுனிவர்ஸ் கதை உருவாவது இதுதான் முதல் முறை என்பேன். அதை இயக்குநர் தன் பார்வையில் அழகாக எடுத்து  வந்துள்ளார். இந்த கான்செப்ட்டை இங்கு கொண்டு வந்ததற்கே இயக்குனருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இதில் எனக்கும் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரம் கொடுத்துள்ளார். சத்யராஜ் சார் சண்டை காட்சிகளை சிறப்பாக செய்துள்ளார். அவர் ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து எனக்கே பயமாக இருந்தது. படத்தில் எல்லாருமே சிறப்பாக செய்துள்ளார்கள். உங்கள் ஆதரவு படத்திற்குத் தேவை".


ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், "இயக்குநர் குகன் இந்தக் கதை பற்றி சொன்ன போது 'இது ஒரு 100 கூடி ரூபாய் பட்ஜெட் படம் போல உள்ளது. எப்படி உருவாக்குவீர்கள்' என்றுதான் கேட்டேன். அவருடைய இந்த கதையில் நான் கெட்டவனாக இருப்பதில் மகிழ்ச்சி. கட்டப்பா சத்யராஜ் சாருடன் நடித்திருக்கிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்".


நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, "'அஸ்வின்ஸ்', 'ஜெயிலர்' படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. சரியான கதை மீது நம்பிக்கை வைத்துள்ள தயாரிப்பாளர்கள் எங்கள் படத்திற்கு கிடைத்துள்ளார்கள். படத்தின் புரோமோஷன்களை அவ்வளவு சின்சியராக செய்து வருகிறார்கள். டிசி போல தமிழ், தெலுங்கிலும் இந்த கான்செப்ட் நிச்சயம் வெற்றி பெரும் என இயக்குனர் நம்பிக்கையாக இருந்தார். படத்தில் ஒரு சூப்பர் ஹுயூமன் கதாபாத்திரம் உள்ளது. அதை சத்யராஜ் சார் செய்கிறார் என இயக்குநர் சொன்னார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ராஜீவ் மேனன் சாரின் படங்களுக்கு நான் பெரிய ரசிகன். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்".


நடிகர் சத்யராஜ், "இது போன்ற கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டீம், தயாரிப்பாளர்கள் இவர்கள்தான் ரியல் ஹீரோஸ்.  இதுபோன்ற படங்களுக்கு தயாரிப்பாளர் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செலவு செய்ய வேண்டும். 'பாகுபலி'படத்தின் போது தயாரிப்பாளர் சோபுவை பார்த்து பிரபாஸ் என்னிடம் விளையாட்டாக, 'பாருங்க சார், யாரோ பணம் போட்டு படம் எடுப்பது போல ஜாலியாக வந்து போகிறார்' என்று சொல்வார். அதே போலவே மன்சூர் சாரும் உள்ளார். வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை எல்லாரும் சிறப்பாக செய்துள்ளனர்"  என்றார்.


தயாரிப்பாளர் மன்சூர் பேசியதாவது, “இந்தப் படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். படத்தை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.

No comments:

Post a Comment