Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Saturday, 16 September 2023

கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் போராடும் மலைகிராம

 கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் போராடும் மலைகிராம மக்களின் கதை " எவனும் புத்தனில்லை " விரைவில் வெளியாகிறது.












 வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் ( V Cinema Global நெட்ஒர்க்ஸ் ) பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் " எவனும் புத்தனில்லை " 


கதை,திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கியுள்ளார்.


நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.


கதாநாயகிகளாக சுவாசிகா நடித்துள்ளார்,  கெளரவ வேடத்தில் சினேகன்  மற்றும்           

 பூனம் கவுர் நடித்துள்ளார்.


மற்றும் வேல.ராமமூர்த்தி, 

நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலிமுருகன், எம்.எஸ் .பாஸ்கர், சிங்கமுத்து, முரு, ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


இப்படத்துக்கு ஒளிப்பதிவு ராஜா சி.சேகர், இசை மரியா மனோகர்,படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,பாடல்கள் சினேகன்

வசனம் எஸ்..டி.சுரேஷ்குமார், கலை இயக்கம் A. பழனிவேல்.

ஸ்டண்ட் - அன்பறிவு, மிராக்கில் மைக்கேல்.

மக்கள் தொடர்பு - மௌனம் ரவி, மணவை புவன்.



படம் பற்றி இயக்குநர் எஸ்.விஜயசேகரன் பகிர்ந்தவை...



7130 அடி உயர மலை கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வியையும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் அவர்கள் படும் இன்னல்களை கொண்டு 

ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படத்தை உருவாக்கியுள்ளோம்.


ஆக்‌ஷன், த்ரில்லர் வகைப் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டது விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றார் இயக்குனர் எஸ்.விஜயசேகரன்.

No comments:

Post a Comment