Featured post

Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!

 *Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!* The release of Dunki Drop 4 has set the excitement at its peak to witne...

Monday 11 September 2023

_Pss புரோடக்ஷன்ஸ்_ மற்றும் _உத்ரா புரொடக்ஷன்ஸ்_ இணைந்து தயாரித்துள்ள

 _Pss புரோடக்ஷன்ஸ்_ மற்றும் _உத்ரா புரொடக்ஷன்ஸ்_ இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 

 *எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு* திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது .....





மேலும் இத்திரைப்படத்தினை _தெரு நாய்கள்_ _படித்தவுடன் கிழித்து விடவும்_

 _கல்தா_ 

_வில்வித்தை_ 

ஆகிய படங்களை தயாரித்து இயக்கிய இயக்குனர் 

 _செ.ஹரி உத்ரா_ 

அவர்கள் எழுதி இயக்கி தயாரிப்பாளராகவும் uடன் இணைந்து 

 _எஸ். பிரீத்தி சங்கர்_ தயாரித்துள்ளார்... கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும் ,சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர் ...

என்பதை பின்னணியாக வைத்து அதற்கு பின்னால் உள்ள அரசியலை இத்திரைப்படம் பேசுகிறது...

 மேலும் இத்திரைப்படத்தில் அதிகாரவர்க்கம் ,ஒடுக்கப்பட்டவர்களை எவ்வாறு அவர்களுடைய திறமைகளை ஒடுக்கி அவர்களை தங்களுடைய மேல் நிலையை அடைய முடியாமல் தவிக்கும் போக்கை மேற்கொண்டு மேற்கொள்கின்றனர் என்பதை படத்தின் மையக்கருவாக ஆழமாக இயக்குனர் பதிவு செய்துள்ளார் ,மேலும் இத்திரைப்படத்தில்

 _சரத்_ அறிமுக கதாநாயகனாகவும் _அயிரா_ கதாநாயகியாகவும் _கஞ்சா கருப்பு_ அருவி மதன் மற்றும் சோனா ஹைடன் ,நரேன் ,

இளையா, எஸ் .எம். டி கருணாநிதி மற்றும் பலர் திரைப்படத்தின் நடித்துள்ளனர்... ஒளிப்பதிவு வினோத் ராஜா ,இவர் வேல்ராஜ் ஒளிப்பதிவாளரின் உதவியாளராக இருந்துள்ளார் ...

 இசை - AJ Alimirzaq ,எடிட்டிங் -கிஷோர் மற்றும் பாடல்களை வித்யாசாகர் ( குவைத் )மற்றும் பா. இனியவன், செ. ஹரி உத்ரா ஆகியோர் எழுதியுள்ளனர் ...

மேலும் இத்திரைப்படம் பரமக்குடி, மதுரை ,ராம்நாடு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நிஜ கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கி படப்பிடிப்பினை மேற்கொண்டுள்ளநர் பட குழுவினர்...

 மேலும் இத்திரைப்படத்தில் இரவு நேர காட்சிகள் சுமார் ஒரு 30 நாட்களுக்கும் மேலாக பரமக்குடியை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் நடத்தியுள்ளனர் ,படத்தின் சண்டைக் காட்சிகளும் ,பாடல் காட்சிகளும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment