Featured post

Rajini Gang Movie Review

Rajini Gang Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரஜினி gang ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Ramesh...

Friday, 5 July 2024

தமிழிலும் 28 கோடி வசூலித்து சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி

 *தமிழிலும் 28 கோடி வசூலித்து  சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி'*






பிரபாஸின் 'கல்கி 2898 கிபி ' திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சயின்ஸ் ஃபிக்சன் வித் ஃபேண்டஸி ஆக்சன் என்டர்டெய்னர்  ஜானரிலான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத்- ஸ்வப்னா தத் -பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்து வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் வெளியான இந்த திரைப்படம் 28 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைப்பதற்காக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 'கல்கி 2898 கிபி' திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment