Featured post

2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன்

 2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர...

Wednesday, 3 July 2024

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு

 *யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT - இந்தியன் 2*






*இரண்டு பாடல்களையும் எழுதியவர் கபிலன்வைரமுத்து.*


நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு பாடலையும் எழுதியவர் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து. இந்தியன் 2 திரைப்படத்தில் கபிலன்வைரமுத்து வசனமும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment