Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Monday 2 September 2024

ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் : நடிகை

 ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் : நடிகை ஆண்ட்ரியா சீற்றம்!






ஹேமா கமிஷன் பற்றி நோ கமெண்ட்ஸ் ஆண்ட்ரியா !


நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழா நடைபெற்றது. 


நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் உள்ளாடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.


கடையைத் திறந்து வைத்து ஆண்ட்ரியா பேசும்போது,

"நான் இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்.இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று.இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது.ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்." என்றார். 


ஆண்ட்ரியாவிடம் ஒரு நிருபர் ஹேமா கமிஷன் பற்றியும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதை பற்றி ஒரு கேள்வி எழுப்பினார் .அதற்கு "அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் "என்று தவித்துவிட்டார். நோ கமெண்ட்ஸ் என்பது அவரது பதிலாக இருந்தது குறித்து நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எப்போதும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் ஆண்ட்ரியா இப்படிக் கூறியது நிருபர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது .

இந்த கடைத் திறப்பு விழாவினை ஒட்டி ஏராளமான பிரமுகர்கள் வந்து  இதன் நிறுவனர் ஹனீப் அவர்களுக்கும் புதிய நிறுவனத்திற்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment