Featured post

நடிகர் நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும்

 *நடிகர் நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு  (அக்-9) துவங்கியது* *இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் நடிகர் நட்டி ...

Wednesday 11 September 2024

நடிகை சம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு

 *நடிகை சம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘சுயம்பு’ படத்தில் இருந்து கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டது!*




தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் நடிகை சம்யுக்தா. தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில், நிகில் நடிப்பில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘சுயம்பு’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் சம்யுக்தா. 


அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ‘சுயம்பு’ படத்தில் இருந்து அவரது கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் தைரியம் மிக்க வீராங்கனையாக கேடயத்துடன் வில் அம்பு ஏந்தியபடி இருக்கிறார் சம்யுக்தா. நிகிலின் 20வது படமான இதில் அவர் ஒரு போர் வீரனாக நடிக்கிறார். தாகூர் மது வழங்கும் இப்படத்தை பிக்சல் ஸ்டுடியோஸ் மூலம் புவனும் ஸ்ரீகரும் தயாரித்துள்ளனர்.


சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் நிகிலுக்கு ஜோடியாக கதாநாயகிகளாக நடித்துள்ளனர். போர் பின்னணியில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் முதல்தர தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ளது. 


பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ’கேஜிஎஃப்’ மற்றும் ’சலார்’ படப்புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, கே.கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.


*தொழில்நுட்பக் குழு:*


எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,

தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,

பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,

வழங்குபவர்: தாகூர் மது,

இசை: ரவி பஸ்ரூர்,

ஒளிப்பதிவு: கே.கே. செந்தில் குமார்,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம். பிரபாஹரன்,

இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்,

சந்தைப்படுத்தல்: ஃப்ர்ஸ்ட் ஷோ

No comments:

Post a Comment