Featured post

Global Star Ram Charan Launched Carnage Of Mega Supreme Hero Sai Durgha Tej,

 *Global Star Ram Charan Launched Carnage Of Mega Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Enter...

Saturday, 7 September 2024

அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி,

 *அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான,   “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!*




பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.  “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில்  தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது. 



விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர்,  அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது. நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.


“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.


தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.


நடிகர்கள் : அத்வே.


தொழில்நுட்பக் குழு: 

தயாரிப்பு நிறுவனம் : எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்

வழங்குபவர்கள்: ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி 

தயாரிப்பாளர்கள்: திருமால் ரெட்டி & அனில் கடியாலா 

இயக்குநர் : பி.ரவிசங்கர் 

இசை: ரவி பஸ்ரூர் 

ஒளிப்பதிவு : விக்னேஷ் ராஜ் 

எடிட்டர்: விஜய் எம் குமார் 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதூர் மக்கள் தொடர்பு : யுவராஜ்.

No comments:

Post a Comment