Featured post

மகர சங்கராந்தியை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தெலுங்கு திரைப்படங்கள் பட்டியலை நெட்ஃபிலிக்ஸ்

 *மகர சங்கராந்தியை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தெலுங்கு திரைப்படங்கள் பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!*...

Thursday, 5 September 2024

டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம்

 *'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!*





இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் பெரியோர்களால் நிச்சியிக்கபட்ட திருமணம் இனிதே நடைபெற்றது. ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் நேற்றிரவு (செப்டம்பர் 4, 2024) வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இன்று காலை (செப்டம்பர் 5, 2024) திருமணமும் நடந்தது. 


இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் அட்லீ, தர்ஷன், இயக்குநர்கள் ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் சுதன், லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் கலை, தயாரிப்பாளர் சாந்தி டாக்கீஸ் அருண், முனீஷ்காந்த், பிக்பாஸ் ராஜு, இயக்குநர் விக்னேஷ் ராஜா, இயக்குனர் விஷால் வெங்கட், பால சரவணன், காளி வெங்கட்,  மிர்ச்சி விஜய், சிவாங்கி உட்பட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment