Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Friday, 31 October 2025

லோகா சாப்டர்1: சந்திரா' திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து

 *'லோகா சாப்டர்1: சந்திரா' திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது!*





மலையாள சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வெற்றி பெற்ற 'லோகா சாப்டர்1: சந்திரா' திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பதை ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. 


திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்ப்டம் மலையாள சினிமாவின் பிரம்மாண்ட கதை சொல்லல் முறையை மறுவரையறை செய்தது. மேலும், மலையாள சினிமா ஒன்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிக வசூல் செய்தது என்ற வரலாற்று சாதனையையும் இந்தத் திரைப்படம் படைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மற்றும் உலகளவில் கவனம் ஈர்த்தது மட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 


டொமினிக் அருண் இயக்கி எழுதிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருடன் நஸ்லென், அஞ்சு குரியன், சந்து குமார் மற்றும் சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் மற்றும் சௌபின் சாஹிர் ஆகியோரின் மறக்கமுடியாத சிறப்பு தோற்றங்கள் படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் அதிகமாக்கியது. 


இந்தப் படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்க, சம்மன் சாக்கோ படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். படத்திற்கு இசை ஜேக்ஸ் பிஜோய். நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. 


புராணம், கற்பனை மற்றும் ஆழமான மனித உணர்வுகளை பேசும் 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைப்படம் பார்வையாளர்களுக்கு தைரியம், விதி மற்றும் தியாகம் போன்றவற்றையும் இதில் சொல்கிறது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டாரின் டிஜிட்டல் பிரீமியர் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் வகையில் ஐந்து மொழிகளில் மிக உயர்ந்த தரத்தில் ஒளிபரப்புகிறது. 


வித்தியாசமான, பான் இந்தியா கதை சொல்லலை பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இயங்கி வரும் ஜியோஹாட்ஸ்டார் 'லோகோ சாப்டர்1: சந்திரா' படத்தை ஸ்ட்ரீம் செய்வதன் மூலம் இதனை மீண்டும் நிரூபித்துள்ளது. 


*ஸ்ட்ரீமிங் விவரம்:*


ஜியோஹாட்ஸ்டாரில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தற்போது (அக்டோபர் 2025) ஸ்ட்ரீம் ஆகிறது.



*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment