*"'டீசல்' படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது"- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!*
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'டீசல்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் முன்பதிவு அதிகரித்திருக்கும் நிலையில், நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸில் படம் ஹிட் ஆகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி தெரிவிக்கிறது.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன் பகிர்ந்து கொண்டதாவது, "கதையின் தனித்தன்மை, அது எந்தளவுக்கு பார்வையாளர்களை கட்டிப் போடுகிறது, அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்ற இந்த இரண்டு விஷயங்களைத்தான் ஒரு தயாரிப்பு நிறுவனம் கவனிக்கும்.
இயக்குநர் சண்முகம் முத்துசாமி 'டீசல்' கதையை சொன்னபோது இந்த இரண்டு விஷயங்களும் பொருந்திப் போனது. கச்சா எண்ணெய் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத பல அதிர்ச்சிகரமான விஷயங்களை 'டீசல்' பார்வையாளர்களுக்கு தெரியப்படுதும்.
கதை இறுதியானதும் இதில் நடிக்க நட்சத்திர அந்தஸ்துடன் அதே சமயத்தில் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாகத் தேடினோம். ஹரிஷ் கல்யாண் 'டீசல்' கதைக்கு சரியாக பொருந்திப் போனார். படத்தின் ஃபைனல் வெர்ஷன் பார்த்தபோது பவர் பேக்ட்டான சிறப்பான நடிப்பைக் கொடித்திருக்கிறார் ஹரிஷ். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னியிருக்கிறார். இந்த தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்" என்றார்.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மென்ட் சார்பில் தேவராஜுலு மார்கண்டேயன் தயாரித்திருக்க, எஸ்பி சினிமாஸ் புரொடக்ஷனில் உருவாகியுள்ள 'டீசல்' படத்தை சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment