Featured post

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 . திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படம...

Sunday, 19 October 2025

கொகொவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

 *கொகொவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!🪔*



தீபாவளி பண்டிகையில் வானம் ஆயிரம் பட்டாசுகளாலும் வாண வேடிக்கையாலும்  ஒளிர்ந்தாலும் கொகொவுக்கு மனதில் ஒரே ஒரு ஆசைதான். அது எந்தவிதமான பட்டாசு சத்தமும் இல்லாமல், பயமில்லாமல் கிகியை பாதுகாப்பது!


உலகமே பட்டாசு சத்தத்தால் அதிரும்போது அவர்கள் இருவருக்கும் நீங்கள் தரும் மிகச்சிறந்த பரிசு அவர்களை பாதுகாப்பதுதான். இந்த தீபாவளியை சற்றே வித்தியாசமாக கொண்டாடுவோமே!


உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு அமைதியான பாதுகாப்பான இடம் ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தந்து உங்கள் அன்பை காண்பியுங்கள். ஏனெனில், செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் மட்டும்தான் உலகம்!


எங்கள் சிறிய குடும்பத்திலிருந்து உங்கள் குடும்பத்திற்கு, அன்பு நிறைந்த தீப ஒளி நாள் வாழ்த்துக்கள்! 


கிகி & கொகொவின் தீபாவளி வாழ்த்துக்கள் 🐾


உங்கள் கொண்டாட்டங்கள் பிரகாசமாகவும், உங்கள் அன்பு நிறைந்தவர்களை பாதுகாப்பாகவும் வைத்திருங்கள். அதுதான் உண்மையான கொண்டாட்டம்.

No comments:

Post a Comment