*இந்த தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்காக இந்தியா ஒளிர்கிறது!*
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்த வருடம் மிகப்பெரிய சினிமா திருவிழாவாக வெளிவர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பண்டோரா உலகம் அதிகாரப்பூர்வமாக இந்திய திரையரங்குகளில் நுழைந்ததை அடுத்து, இந்த தீபாவளி இன்னும் கொண்டாட்டமாக மாறியது.
இந்திய மக்களின் உணர்வுகள் மற்றும் பண்டிகை கால கொண்டாட்டத்தை எதிரொலிக்கும் 'அவதார்' திரைப்படம் நீண்ட காலமாக இந்திய ரசிகர்களின் இதயங்களில் தனியிடம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்ததை அடுத்து, அடுத்த பாகமும் நிச்சயம் வெற்றி அடையும்.
இந்த பண்டிகைக் காலத்தில் பண்டோராவின் வருகையைக் கொண்டாடும் வகையில், அவதாரை குறிக்கும் 'A' என்ற எழுத்து வடிவில் நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றியும் பண்டோராவின் துடிப்பான உலகத்தைக் குறிக்கும் வகையில் வண்ணமயமான ரங்கோலி கோலங்களுடனும் ரசிகர்கள் கொண்டாடினர். கதைசொல்லல் மற்றும் இந்தியர்களின் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக இணைக்கும் வகையில் 'அவதார்' ரசிகர்களுடன் கலந்திருப்பதை இது குறிக்கிறது.
ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்ட சினிமா அனுபவத்தைக் காண தயாராகுங்கள்! பார்வையாளர்களை பண்டோராவின் சொல்லப்படாத பகுதிகளுக்குள் அழைத்துச் செல்ல இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.
டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தை 20த் சென்சுரி ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
No comments:
Post a Comment