Featured post

*City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights

 *City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights* The Court of the Chief Judge, Cit...

Saturday, 25 October 2025

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக்

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க  (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப்பெற்ற சில முடிவுகள்*









1. VPF Payment - கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் VPF கட்டணத்தை Qube, UFO, PRO VA, Sony மற்றும் இதர டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு வாராவாரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதே ப்ரொஜெக்டரில் திரையிடும் ஆங்கில மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பல வருடங்களாக அவ்வாறு VPF கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த பாகுபாட்டை (Discrimination in charging VPF for Tamil film) டிஜிட்டல் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே, ஏப்ரல் 1, 2026 முதல் VPF கட்டணம் வசூலிப்பதை டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டு கொள்கிறது. One Time Content Delivery கட்டணம் மட்டுமே ஏப்ரல் 1, 2026 முதல் தயாரிப்பாளர்கள் தருவார்கள் என டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு இந்த பொதுக்குழு தெரிவிக்க விரும்புகிறது. திரையரங்குகள் சொந்தமாகவோ அல்லது வாடகை மூலம் டிஜிட்டல் ப்ரொஜெக்டர்களை திரையரங்குகளில் நிறுவ வேண்டும். சொந்தமாக டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வைத்திருக்கும் திரையரங்குகள், One-Time Content Delivery Charge மட்டுமே வாங்க வேண்டும். VPF கட்டணம் வாங்க கூடாது என்று அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். (From 1st April 2026, Producers will pay only the Content Delivery Charges like it is being charged currently for Hollywood films and shall not pay the Virtual Print Fee charged for Digital Projects kept in theatres. Digital projectors must be owned or hired by Theatres on their own and VPF towards that should not be charged to Producers).


2. தமிழ்நாட்டில் ஆயிரத்து நூற்றைம்பது திரையரங்கம் உள்ளது. அவற்றை ஒருங்கிணைத்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் ஒரு வெளிப்படைத் தன்மைக் கொண்டு வர ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு ஒரு செண்ட்ரலைஸ்ட் பாக்ஸ்-ஆஃபிஸ் கலெக்‌ஷன் டிராக்கிங் சிஸ்டம் (Centralized, Online Box Office Tracking Software System) வரவேண்டுமென்று நமது சங்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மென்பொருளைக் கொண்டு வர தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிப்ளெஸ் உரிமையாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கமும் முழு ஒத்துழைப்பு தருமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. (There are incidents of wrong/under reporting of collection by theatres and to prevent any such unethical practice by theaters, it is necessary to go live with an Integrated Online Box Office collection tracking system linking all theaters in Tamil Nadu with a centralized server. That server access will be given only to the particular Producer and Distributor for their film to know the collections of their film for each show). 


3. ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் கட்டணம் வசூலிக்கும் Book My Show, Zomato District போன்ற நிறுவனங்கள் அந்தந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு ஷேர் தர வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனம் என மூவருக்கும் சரிசமாக ஷேர் தரப்பட வேண்டும் (equal share of online ticket charges/convenience charges to be given to all three involved in a film).  பார்வையாளர்கள் திரைப்படத்திற்கு தான் ஆன்லைன் புக்கிங் செய்கிறார்கள். எனவே, திரைபடத்தை எடுத்த தயாரிப்பளருக்கும் சரிசமமான ஷேர், அவ்வாறு வரும் வருவாயில் கொடுக்கப்பட வேண்டும் என இந்த பொது குழு ஆன்லைன் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களையும் கேட்டு கொள்கிறது. TFAPA demands one third share of the Convenience Fee/Online Ticketing charges from companies booking tickets online like Book My Show/Zomato District as the audiences are booking tickets for a film and it is fair and reasonable Producers of such films get a fair share (one Third) along with Theatre owners and Online Ticketing companies. 


4. தென்னிந்தியா தொழிலாளர்கள் சம்மேளம் (FEFSI) தொடங்கியுள்ள FESRA அமைப்பின் மூலம், SWIPE CARD உதவியுடன் தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்து அதன்படி அவர்களுக்கு வாராவாரம் சம்பளங்கள் வழங்கும் முறைக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருவதென முடிவு செய்துள்ளனர். இந்த டிஜிட்டல் வருகை பதிவேடு மூலம் சரியான முறையில் சம்பளங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க முடியும் என்பதால், நமது சங்கம் சம்மேளனத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு தர முன் வந்துள்ளது. (TFAPA is agreeing to support FEFSI to implement the Digital recording of attendance using Swipe Card by workers and making payment as per the software to the workers).


5. தமிழ்நாட்டில் சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் (Single Window Clearance) மூலம் திரைப்பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கவும், சென்னை நகரில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி, ஒரு கோரிக்கையை சில வருடங்களுக்கு முன்பு நமது சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. அதற்காக, சென்னை நகரில் எந்தெந்த தெருக்கள் பகல் நேரத்தில் படப்பிடிப்புக்கு உகந்தது என்று ஆய்வு செய்யப்பட்டு விபரங்கள் கொடுக்கப்பட்டது. அந்த அனுமதியை விரைவில் தருமாறு தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. (TFAPA has submitted to Tamil Nadu State Government the locations and roads where the shootings can be held during the daytime (currently only during night times shooting in roads can be done) so that Producers need not go all the way to Pondicherry to shoot road scenes. We seek the TN Government to approve that request for single-window clearance for shooting approval so that Producers can shoot in Chennai and other cities during the day time and also in various locations which were listed. Currently many State Governments provide this single-window clearance to give shooting permissions and we seek the same support from TN Government.)


மேற்கண்ட இந்த கோரிக்கைகளை மாநில அரசிற்கும் சம்பந்தப்பட்ட திரைத்துறை சங்கங்களுக்கும் மனுவாக அனுப்ப உள்ளோம் என்பதனை இந்த பொதுக்குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.



இங்ஙனம்,

பொறுப்பாளர்கள்,

Office-Bearers of Tamil Film Active Producers Association

T.G. Thyagarajan - President, 

T. Siva - General Secretary, 

G Dhananjheyan - Treasurer

S.R. Prabhu - Vice President, 

S.S. Lalit Kumar - Vice President, 

Mukesh R. Mehta - Joint Secretary, 

S. Vinod Kumar - Joint Secretary, 

Director-Producer K.S. Ravikumar, 

Director-Producer Sundar C and 

EC Members of TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION.

No comments:

Post a Comment